சிறப்பு மனுநீதி நாள் முகாம்

உரியூர் கிராமத்தில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 73 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Update: 2022-06-08 18:24 GMT

அரக்கோணம்

தக்கோலத்தை அடுத்த உரியூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் உரியூர், அணைக்கட்டா புத்தூர் மற்றும் அனந்தாபுரம் கிராமங்களை ேசர்ந்த பொது மக்கள் கலந்துகொண்டு பட்டா, பட்டா மாற்றம், ரேஷன் கடை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். அதைத் தொடர்ந்து 73 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலாசவுந்தர், அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், அரக்கோணம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜராஜ சோழன், மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் தனம்மாள், நிர்மலா, சே.புவனேஸ்வரி, லட்சுமி நாராயணன், புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்