சிவகிரியில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்

சிவகிரியில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடந்தது.

Update: 2023-10-19 18:45 GMT

சிவகிரி:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, இலவச வீட்டுமனை பட்டா மாறுதல், வருவாய் ஆவணங்களில் பிழை திருத்தம் மற்றும் பரப்பு திருத்தம் தொடர்பான சிறப்பு பட்டா மாறுதல் முகாம் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. முகாமை மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களிடம் இருந்து 470 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் ஆனந்த், மண்டல துணை தாசில்தார் வெங்கடசேகர், வருவாய் ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்