தூத்துக்குடி ஆயுதப்படையில்போலீசாருக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தூத்துக்குடி ஆயுதப்படையில்போலீசாருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2022-12-18 18:45 GMT

தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கு சைபர் குற்ற பிரிவு கூடுதல்போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ் தலைமை தாங்கினார். ஆயுதப்படை போலீஸ் துணைசூப்பிரண்டு ஜெயராஜ் முன்னிலை வகித்தார். இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் மதுரை டாக்டர் ஹரிஷ்பாபு தலைமையிலான மருத்துவர் குழுவினர் போலீசாருக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் சப்- இன்ஸ்பெக்டர்கள் கணேச மணிகண்டன், ஈஸ்வரமூர்த்தி, சதீஷ்குமார் உள்ளிட்ட போலீசார், குடும்பத்தினர் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்