மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்;

Update: 2023-02-25 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் முகாமில் கலந்து கொண்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்கள் சிவராமன், தினேஷ், மோசஸ் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து உடல் ஊனத்தின் சதவீதம் குறித்து பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகை வழங்குவதற்கான பரிந்துரைகளை செய்தனர். முகாமில் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி புரிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்