மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

சேரன்மாதேவியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடைபெற உள்ளது.;

Update:2023-09-22 02:30 IST

சேரன்மாதேவி:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (சனிக்கிழமை) சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றின் நகல்கள், 5 புகைப்படம் ஆகியவற்ேறாடு விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளும் முகாமில் அதை பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்