சிறப்பு மருத்துவ முகாம்

புளியங்குடியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது

Update: 2023-06-25 19:32 GMT

புளியங்குடி:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு பதிவு செய்யும் முகாம், வாசுதேவநல்லூர் வட்டாரம் நகரம் ஊராட்சி ஒன்றிய ஜவஹர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் வரவேற்று பேசினார். இணை இயக்குநர் (நலப்பணிகள்) பிரேமலதா திட்ட விளக்கவுரையாற்றினார்.

தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜா, டாக்டர் சதன் திருமலைகுமார், நகரம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதரமணிபாய் செல்வமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முகாமில் பொதுமக்களுக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் திருமலை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்