சிறப்பு மருத்துவ முகாம்
எமரால்டு அரசு பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மஞ்சூர்,
குந்தா தாலுகா எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை டாக்டர் முருகேஷ், இத்தலார் ஊராட்சி மன்ற தலைவர் பந்தையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் குழந்தைகள் நலம், பல் டாக்டர், மகப்பேறு, காது, மூக்கு, தொண்டை நிபுணர், அறுவை சிகிச்சை டாக்டர்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர். இதில் சித்த டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.