சிறப்பு மருத்துவ முகாம்

செங்கோட்டை அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-07-08 18:45 GMT

செங்கோட்டை:

தெற்குமேடு கிராம ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் முரளி சங்கர் அறிவுறுத்தலின்படி தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. செங்கோட்டை யூனியன் தலைவர் திருமலைச்செல்வி, தெற்குமேடு பஞ்சாயத்து தலைவர் அனு கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினா். வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.

முகாமில் மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், தோல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மனநல மருத்துவம், கண் மற்றும் சித்த மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

புளியரை மருத்துவ அலுவலர் மருத்துவர் மணிபிரசாத், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சீதாராமன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், ராஜேந்திரன், வெங்கடேசன், செந்தில்குமார், கல்யாண சுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர். செங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்