சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
சென்னை,
மக்கள் சேவை மற்றும் புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய 15 காவலர்களுக்கு நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் 8 கிராம் எடையில் தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
அதன் விவரம்:-
1. திரு. க. வெங்கடராமன், இ.கா.ப., கூடுதல் காவல் துறை இயக்குநர். குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
2. திரு அஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறை தலைவர்/கூடுதல் காவல் ஆணையாளர். சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு), சென்னை பெருநகர காவல்.
3 திரு. சு. ராஜேந்திரன், இ.கா.பா., காவல்துறை துணைத் தலைவர், குற்றப்புலனாய்வுத் துறை நுண்ணறிவு, சென்னை.
4. திருமதி. ப.ஹீ. ஷாஜிதா. காவல் கூடுதல் துணை ஆணையாளர், இணையவழி குற்றப் பிரிவு, சென்னை பெருநகர காவல்.
5. திரு. ஹா. கிருஷ்ணமூர்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
6. திரு. வே. அனில் குமார், காவல் உதவி ஆணையர், கொங்கு நகர் சரகம், திருப்பூர் மாநகரம்.
7. திரு. கோ. சரவணன், காவல் துணைக் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, மதுரை சரகம்.
8 திரு. ர. மாதையன், காவல் ஆய்வாளர், சூலூர் காவல் நிலையம், கோயம்புத்தூர் மாவட்டம்.
9. திருமதி. மா. அமுதா, காவல் ஆய்வாளர், பீலமேடு காவல் நிலையம், கோயம்புத்தூர் மாநகரம்.
10. திருமதி. ம. அனிதா, காவல் ஆய்வாளர், மாசார்பட்டி காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம்.
11 திருமதி. இரா. விஜயா, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்
12 திருமதி. ஆ. மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரியலூர் மாவட்டம்.
13. திருமதி. அ.சித்திராதேவி, காவல் ஆய்வாளர், இணைய குற்றப்பிரிவு, திருப்பூர் மாவட்டம்.
14 திருமதி. ந. மணிமேகலை, காவல் ஆய்வாளர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை பெருநகர காவல்.
15. மறைந்த காவல் ஆய்வாளர் கு. சிவா, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, திருச்சிராப்பள்ளி.