காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

சங்கராபுரம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.;

Update: 2022-09-23 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே காட்டுவன்னஞ்சூரில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார், டாக்டர் சுகன்யா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளதா என்று பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்தனர். மேலும் காய்ச்சல் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பவுல் ஏசுதாஸ், சுகாதார ஆய்வாளர் சரவணன், பாசில், பாலமுருகன், சுகாதார செவிலியர்கள் சங்கீதா, சுசிலா, சுமதி மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர் குணதீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சங்கராபுரம், மஞ்சபுத்தூர், வடசெட்டியந்தல், தேவபாண்டலம், பூட்டை, அரசம்பட்டு, மல்லாபுரம் ஆகிய இடங்களிலும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்