குழந்தைகளுக்கு சிறப்பு உணவு ஊட்டச்சத்து பெட்டகம்
குழந்தைகளுக்கு சிறப்பு உணவு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் கீழ் 0-6 மாதம் வயது உடைய ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், 6 மாதம் முதல் 6 வயது வரை ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு உணவு ஊட்டச்சத்து பெட்டகத்தினை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் நிலக்கடலை மிட்டாய், சோயா பவுடர், பால் பொருட்கள் கலந்த சிறப்பு உணவுகள், தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் பேரிச்சம் பழம் 1 கிலோ, நெய் 200 கிராம், அயன் பவுடர், சத்து மாவு, அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கபட்டது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும், குழந்தைகளுக்கு தினமும் வழங்கப்படும் உணவுகள் குறித்தும், குழந்தைகளின் எடை, வளர்ச்சி அளவு குறித்தும் கணக்கீடு செய்து தினசரி பராமரிக்கும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.