தூய்மை காவலர்களுக்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை காவலர்களுக்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது;
சிக்கல்:
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராஜ்குமார் தலைமை தாங்கினார். தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குமாரராஜா தலைமையில் சுகாதாரத்துறையினர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் குறித்து அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.