வடுக பைரவருக்கு சிறப்பு அலங்காரம்

வடுக பைரவருக்கு சிறப்பு அலங்காரம்

Update: 2022-10-17 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிபட்டியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தர்மவர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தனி சன்னதியாக வடுகபைரவர் உள்ளார். இந்த கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு ரவி குருக்கள் தலைமையில் சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. இதைதொடர்ந்து வடுக பைரவருக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்தில் மலர் மாலைகள் சூட்டப்பட்டு வடுக பைரவருக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடுக பைரவரை தரிசித்தனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் மற்றும் சிவபுரிபட்டி சுற்றியுள்ள பக்தர்கள், கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்