தின்பண்டங்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம்

தின்பண்டங்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.;

Update: 2022-10-26 16:26 GMT

லத்தேரியை அடுத்த அரும்பாக்கத்தில் உள்ள மகாசக்தி காளியம்மன் கோவிலில் அமாவாசையை யொட்டி அம்மனுக்கு இனிப்பு உருண்டை, முறுக்கு, அதிரசம், வடை, போளி, கடலை உருண்டை உள்ளிட்ட தின்பண்டங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்