கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்ற சிறப்பு முகாம்கள்

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்ற சிறப்பு முகாம்கள் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.

Update: 2023-06-01 18:04 GMT

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற கிரெயின்ஸ் என்ற வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய தாசில்தார் அலுவலகங்களில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் கற்பகம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இந்த சிறப்பு முகாமில் விவசாயிகள் அனைவரும் பங்கு பெற்று உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் உடனடியாக ஒப்படைத்து, கிரெயின்ஸ் வலைதளத்தில் தங்களின் அடிப்படை விவரங்களை பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம். இந்த சிறப்பு முகாம் குறித்த தகவல்கள் அனைத்து விவசாய பெருங்குடி மக்களிடமும் சென்று சேரும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கிரெயின்ஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்