வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.;
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்றன. மேலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அந்த வகையில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதேபோல் வருகிற 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.