மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்

திருப்பத்தூரில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-08 16:52 GMT

திருப்பத்தூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுடைய வீட்டு மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு, கைத்தறி மற்றும் விசைத்தறி மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் திருப்பத்தூர் டவுன் அவ்வை நகர் பகுதியில் நடைபெற்றது. முகாமை செயற்பொறியாளர் அருள் பாண்டியன் தொடங்கி வைத்தார். முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டனர். முகாமில் நகராட்சி கவுன்சிலர்கள் டி.டி.சி.சங்கர், ஜீவிதா பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் மனோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்