மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.;
ஆற்காடு மின்கோட்ட செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு அறிவித்துள்ள மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
அதன்படி, ரத்தினகிரி மின் பிரிவில் பூட்டுத்தாக்கு ரேஷன் கடை அருகில், மாங்குப்பம் பள்ளி, மேலகுப்பம் ஊராட்சி அலுவலகம், பெருமுகை கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி, சம்பங்கி நல்லூர், செங்காநத்தம் பகுதிகளிலும், காவனூர் மின் பிரிவில் பட்டணம், புங்கனூர், சாம்பசிவபுரம், குப்பம், வெங்கடாவரம், பாலமதி ஆகிய ஊராட்சி அலுவலகங்கள், கத்தியவாடி மின் பிரிவில் தாழனூர், கத்தியவாடி, கீழ் குப்பம், ஆயிலம், அருங்குன்றம் ஆகிய ஊராட்சி அலுவலகங்கள், விஷாரம் மின் பிரிவில் வேப்பூர் கிராம நிர்வாக அலுவலகம், நந்தியாலம் ஊராட்சி அலுவலகம், தென் நந்தியாலம் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் மின் இணைப்பு எண், ஆதார் எண், செல்போன் எண் போன்ற விவரங்களுடன் வந்து இணைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.