தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடைபெற்றது;

Update: 2023-04-21 18:45 GMT

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார் கூறியதாவது:-

எலும்பு முறிவு டாக்டர், குழந்தைகள் நல டாக்டர், மனநல டாக்டர் ஆகியோர் கலந்து கொண்டு தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.

அதன் பேரில் தகுதியானவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகுதியின் அடிப்படையில் மாத உதவித்தொகை வழங்கப்படும்.

மனவளர்ச்சி குன்றிய, தசை நோயால் பாதிக்கப்பட்ட, தொழு நோயில் குணமடைந்தவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட் டவர்கள் உள்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது.

கை, கால் இயக்க குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளில் 75 சதவீதம் பாதிக்கப்பட்டோர் மற்றும் அதற்கு மேல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் பராமரிப்பு உதவி தொகை ரூ.2 ஆயிரம் வழங்க பரிந்துரை செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்