மின்வாரிய அலுவலகங்களில் பொது மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் பொது மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நாளை முதல் நடக்கிறது.

Update: 2023-07-23 11:27 GMT

திருவண்ணாமலை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் பொது மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நாளை முதல் நடக்கிறது.

சிறப்பு முகாம்

தமிழ்நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு மாத காலத்திற்கு வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அதன்படி திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் மேற்கு திருவண்ணாமலை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு அலுவலகத்திலும் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே பொது மக்கள் பெயர் மாற்றம் செய்வதற்கு உரிய ஆவணங்களுடன் ஆதார் அட்டை, வீட்டு வரி ரசீது, கிரையப்பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் அல்லது நீதிமன்ற ஆணை ஆகியவற்றை இணைத்து பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.

இறப்பு சான்று

மேலும் இறந்தவர்களின் பெயர்களில் உள்ள மின் இணைப்பினை பெயர் மாற்றம் செய்ய உரிய விண்ணப்பத்துடன் இறப்பு சான்று, வாரிசு சான்று, ஆதார் அட்டை, நடப்பு வீட்டு தேதி வரி ரசீது, இடத்தின் உரிமை சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

அதேபோல் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது மின் இணைப்புகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் பெயரில் பெயர் மாற்றம் செய்ய உரிய ஆவணங்களுடன் இணையதளம் மூலமாவோ அல்லது பிரிவு அலுவலகத்திலோ நேரில் சமர்ப்பித்து பெயர் மாற்றத்திற்கு உரிய கட்டணம் செலுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை தகவலை திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட மேற்கு செயற்பொறியாளர் பக்தவச்சலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்