அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்
அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.;
ஆண்டுதோறும் அக்டோபர் 30-ந் தேதி உலக சிக்கன நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்தநாளில் ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம் பெற அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அஞ்சலக கோட்டத்தில் அமைந்துள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் சனிக்கிழமை மற்றும் 31-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சிறு சேமிப்பு கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம் நடைபெறும்.
அன்றைய நாட்களில் பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி சிறுசேமிப்பு கணக்குகளை தொடங்கி பயன் பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.