மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.;

Update: 2022-06-22 13:48 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். காதொலி கருவி ஒருவருக்கும், 160 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. 22 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவு, 115 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு, 126 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்