வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாதந்தோறும் வங்கி கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்

வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாதந்தோறும் வங்கி கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-08 11:09 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் புதன்கிழமைதோறும் வங்கிக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

அதன்படி அணைக்கட்டு, கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாதத்தின் முதல் புதன்கிழமையும், குடியாத்தம், கணியம்பாடியில் 2-ம் புதன்கிழமையும், பேரணாம்பட்டு, வேலூரில் 3-ம் புதன்கிழமையும், காட்பாடியில் 4-ம் புதன்கிழமையும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது.

இந்த முகாம்களில் சுயஉதவி குழுக்கள், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம். மகளிர் திட்டம், தாட்கோ, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பான அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்