மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
பாவூர்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.;
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் யூனியன் தலைவி சீ.காவேரி மனுக்களை பெற்றார். 73 மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, இலவச பஸ்பாஸ், உபகரணங்கள் போன்ற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பம் செய்தனர். நிகழ்ச்சியில் அமர்சேவா சங்க பணியாளர்கள் அருள் சுப்பிரமணியன், மாரிசெல்வன், சரண்யா, கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.