மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் திருச்சுழியில் நடைபெற்றது.;

Update: 2023-04-07 20:26 GMT

திருச்சுழி, 

திருச்சுழியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாணக்குமார் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றார். முகாமிற்கு திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா, தனி தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சுழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியிலிருந்து 55-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான 3 சக்கர மோட்டார் சைக்கிள், வங்கி கடன், மூன்று சக்கர சைக்கிள், தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர். மாற்றுத்திறனாளிகள் வழங்கிய மனுக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். முகாமில் மண்டல துணை தாசில்தார் சரவணகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்