மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.;
தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இ.சி.ஈ. அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். டாக்டர்கள் இம்ரான், ராஜலட்சுமி, மணிமாலா, நிர்மல் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொண்டனர். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சீவல முத்து, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, பிசியோதெரபிஸ்ட் சித்ராதேவி, சிறப்பு பயிற்றுனர்கள் கிருஷ்ணசாந்தி, மாலதி, முத்துலட்சுமி, முத்து துரைச்சி, வேலம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இந்த முகாமில் 19 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.