சிவகாசியில் 209 இடங்களில் சிறப்பு முகாம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்களை பெறுவதற்கு சிவகாசியில் 209 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-07-24 18:49 GMT

சிவகாசி, 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்களை பெறுவதற்கு சிவகாசியில் 209 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மகளிர் உரிமை திட்டம்

தமிழக அரசு சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து வீடுகளுக்கும் தன்னார்வ தொண்டர்கள் மூலம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 80 சதவீதம் பேர் இந்த விண்ணப்பத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேற்று முதல் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பெறப்பட்டு வருகிறது.

209 இடங்கள்

சிவகாசி தாலுகாவில் உள்ள 108 ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் மகளிர்கள் தங்களது விண்ணப்பங்களை கொடுக்க 209 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

காலை 9 மணிக்கு பெண்கள் அரசு அறிவித்துள்ள அனைத்து ஆதாரங்களை கொண்டு வந்து சிறப்பு முகாம்களில் ஆர்வத்துடன் நின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பஞ்சாயத்து செயலர்கள் செய்திருந்தனர். ஒவ்வொரு சிறப்பு முகாமிலும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் விண்ணப்பங்களை விரைந்து பெற்று உரிய முறையில் பதிவு செய்து கொண்டனர்.

அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி தாசில்தார் லோகநாதன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜீவ்காந்தி ஆகியோர் சில முகாம்களில் திடீர் ஆய்வு செய்தனர். வருகிற 5-ந் தேதி முதல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தேவையான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்