வாணியம்பாடி
எக்லாஸ்புரத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நாட்டறம்பள்ளி ஒன்றியம் எக்லாஸ்புரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஈ.எஸ்.பாரதி சேட்டு தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஈ.பி.விஜயன், மண்டல துணை தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு இருந்த கால்நடைகளுக்கு டாக்டர் கோகிலாசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தும், கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்கள் குறித்தும் அதன் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
முகாமில் கால்நடை மருத்துவர்கள் பணியாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.