சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனி திருமஞ்சத்ைதயொட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-06-26 18:45 GMT

ஆனி திருமஞ்சத்ைதயொட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அபிஷேகம்

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள நடராஜர் சிவகாமசுந்தரிக்கு ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது. முன்னதாக திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் நாகை மற்றும்அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடராஜர், சிவகாமி சுந்தரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

வேதாரண்யேஸ்வரர் கோவில்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு நடராஜருக்கு பல்வேறு திரவியங்கள், பால், தேன், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நேற்று காலை 10 மணியளவில் நடராஜரும், சிவகாமி அம்மனும் எழுந்தருளி திருக்கண் சாற்றப்பட்டு வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்