முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
பிரகதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருநாளையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.;
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருநாளையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அபிஷேகத்தின் போது திரவிய பொடி, மாவு பொடி, திருநீறு, மஞ்சள், சந்தனம், இளநீர், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் இந்து சமய அறநிலையத்துறையினர், தொல்லியல் துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) கோவிலில் உற்சவர் மூர்த்திக்கு மாலை 5 மணி அளவில் அபிஷேக ஆராதனை நடைபெற்று 27 தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜை செய்து 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டு கோவிலை வலம் வந்து 7 மணி அளவில் சொக்கபனை ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. பின்னர் சுடர் (சாம்பல்) எடுத்து வந்து சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.