முத்துப்பேட்டை தாலுகா ஜாம்புவானோடையில் விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோவில் உள்ளது. இங்கு குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். இதையடுத்து குருப்பெயர்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நவக்கிரக குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார ஆராதனைகள், அர்ச்சனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்