சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்
திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.;
திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று சாய்பாபாவுக்கு பக்தர்கள் விபூதி அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவையால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தன. மேலும் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி சாய்பாபாவை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.