பழனி பெரியாவுடையார் கோவிலில் உலக நன்மை வேண்டி அன்னாபிஷேகம்

பழனி பெரியாவுடையார் கோவிலில் உலக நன்மை வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-07-05 20:23 GMT

பழனி பெரியாவுடையார் கோவிலில் உலக நன்மை வேண்டி நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பெரியாவுடையார் சன்னதி முன்பு பிரதான கலசம் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடந்தது. அதன்பிறகு சிவபெருமானுக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது. பின்னர் சுத்த அன்னத்தால் சிவபெருமான் திருவுருவம் செய்யப்பட்டு, மஞ்சள்நிற அன்னத்தால் கிரீடம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து விநாயகர், பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர், திருமால், தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தேவாரம், திருவாசகம் பாடி மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்கள் கந்தவிலாஸ் நிறுவன உரிமையாளர்கள் செல்வகுமார், நவீன், நரேஷ், கோவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்