1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி
நாங்குநேரி தொகுதியில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்;
இட்டமொழி:
நாங்குநேரி தொகுதி முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் 1 லட்சம் பனை விதைகள் சாலையோரம் மற்றும் குளக்கரைகளில் விதைக்கும் திட்டப்பணி தொடக்க விழா நேற்று இட்டமொழியில் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கும் பனை விதைளை வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகப்பைகளை வழங்கினார்.
முன்னதாக செண்பகராமநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தில் புதிய பெஞ்சு, டெஸ்க்குகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, யூனியன் துணைத்தலைவர் இசக்கிபாண்டி, பஞ்சாயத்து தலைவர்கள் முருகம்மாள் சிவன்பாண்டியன், சுமதி சுரேஷ், காங்கிரஸ் நிர்வாகிகள் நம்பித்துரை, அழகியநம்பி, செல்லப்பாண்டியன், ராமஜெயம், வாகைதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.