தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கியது

தென்காசி மாவட்டத்தில் தென் மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியது. இதையொட்டி வெப்பம் தணிந்து விரைவில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2023-05-27 18:45 GMT

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தில் அனல் கக்கும் 'அக்னி நட்சத்திரம்' காலம் தற்போது நடைபெற்று வருகிறது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் பொய்த்து போனதால் அணைகள், குளங்கள் வறண்டு கிடக்கின்றன. அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தால் பள்ளிக்கூடங்கள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென் மேற்கு பருவக்காற்று மெல்ல வீசத்தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம் பகுதிகளில் காற்று வீசியது. நேற்று ஆலங்குளம், மாறாந்தை, சீதபற்பநல்லூர், நெல்லை பகுதி வரையிலும் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கியது.

இதனால் உச்சி வெயில் கடுமையாக இருந்த போதிலும் காற்று, அந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாத்தது. மேலும் நேற்று அதிகாலை நேரத்தில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது. இனி காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், இது தென் மேற்கு பருவமழை விரைவில் பெய்வதற்கான அறிகுறி என்றும் தெரிகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்