தென்மண்டல ஜூடோ போட்டி: தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் வெற்றி

தென்மண்டல ஜூடோ போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்

Update: 2022-12-08 18:45 GMT

தென்மண்டல அளவிலான மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு இடையேயான ஜூடோ போட்டி திருப்பூர் விஜயபுரத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் ஆகிய இடங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு விளையாடினர். இதில் இப்பள்ளி மாணவன் அஸ்வின் குமார் 35 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும், பிரித்விக் ராஜ் 40 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகி ஜெயராமன், தாளாளர் பிரியாகேசவன், பள்ளி முதல்வர் தீபா ஸ்ரீசர்மா, ஜூடோ பயிற்சியாளர் ஸ்டீபன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்