தென்திருப்பேரை பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த மழை

தென்திருப்பேரை பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

Update: 2022-08-26 10:09 GMT

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை பகுதியில் நேற்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 12.45 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக அனல்காற்று வீசிய இப்பகுதியில் நேற்று இதமான சூழல் உருவானது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்