தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

கரூர் அருகே தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.;

Update: 2022-11-14 18:30 GMT

கரூர் அருகே காக்காவாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் தேசிய ஏர்கன் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான ரைபிள் மற்றும் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலப்பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஜூனியர், ஓபன் போட்டிகள் அனைத்தும் 3 ரவுண்டுகள் அடிப்படையில் நடத்தப்பட்டன. இதில் 50 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்