தெற்கு அய்வாய்புலிபட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
தெற்கு அய்வாய்புலிபட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள தெற்கு அய்வாய்புலிபட்டி குஞ்சர வல்லப விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை 8.30 மணிக்கு 2-ம் கால பூஜை, மூலமந்தி ஹோமம், பிம்பசுத்தி உள்ளிட்ட பல்வேறு யாக சாலை பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கன்னிமூல மஹா கணபதி, விமான கலசங்கள், குஞ்சர வல்லப விநாயகர், பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்.