பேச்சுவார்த்தையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

பேச்சுவார்த்தையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-09-26 19:19 GMT

புள்ளம்பாடி ஒன்றியம், மேலரசூர் கிராம மக்களுக்கு கடந்த 2 மாதங்களாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதையடுத்து குடிநீர் வழங்கக்கோரி திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடுவது என முடிவெடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் இதுசம்பந்தமாக லால்குடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் விக்னேஷ் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் மேலரசூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து, துணைத்தலைவர் அமுதவள்ளி முருகபாண்டியன், முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன், சோமு, ராஜரெத்தினம், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அதேபோல் புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கல்லக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வருகிற 30-ந் தேதிக்குள் மேலரசூர் பகுதி மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்