இரட்டைக்கொலை வழக்கில் ராணுவவீரரின் தாயார் கைது

ஆலங்குளம் அருகே நடந்த இரட்டைக்கொலை வழக்கில் ராணுவவீரரின் தாயார் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-01 20:32 GMT

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வக்கீல் அசோக்ராஜ் (வயது 27), அவருடைய பெரியப்பா துரைராஜ் (55) ஆகிய 2 பேரையும் கடந்த 29-ந்தேதி இரவில் ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நிலத்தகராறு காரணமாக அசோக்ராஜ், துரைராஜ் ஆகிய 2 பேரையும் கும்பல் கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நெட்டூரைச் சேர்ந்த ராணுவவீரரான சுரேஷ் (27), அவருடைய தந்தை குழந்தைபாண்டி (60) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராணுவவீரர் சுரேசின் தாயார் ஜக்கம்மாளை (52) போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்