தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நெடுஞ்சாலை மையப்பகுதியில் சோலார் பேனல் மூலம் மின்உற்பத்தி டாக்டர் செந்தில்குமார் எம்.பி. தகவல்

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நெடுஞ்சாலை மையப்பகுதியில் சோலார் பேனல் மூலம் மின்உற்பத்தி டாக்டர் செந்தில்குமார் எம்.பி. தகவல்;

Update:2022-06-06 22:59 IST

தர்மபுரி:

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தேசிய நெடுஞ்சாலை மைய பகுதிகளில் சோலார் பேனல்கள் அமைத்து அதன் மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தேன். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனா். மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் சோலார் பேனல்கள் அமைத்து சூரிய மின்னாற்றல் மூலம் மின்உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திட்டத்தை நிறைவேற்றி கொள்வதற்கான அனுமதி கடிதத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணைய முதன்மை பொது மேலாளர் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் முதல்முறையாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஜிட்டான்ட அள்ளி முதல் தர்மபுரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 844-ல் மையப்பகுதியில் சோலார் பேனல்களை பொருத்தி சூரிய ஆற்றலில் இருந்து மின்னாற்றல் தயாரித்து அதனை வணிக ரீதியாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்