சோலார் மின்வேலி அமைக்கும் பணி

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் சோலார் மின்வேலி அமைக்கும் பணி நடந்தது.;

Update: 2023-09-26 19:45 GMT

கொடைக்கானல் வனச்சரகத்துக்குட்பட்ட பேரிஜம் பகுதி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இங்கு மின்சார வசதி கிடையாது. இருப்பினும் அங்குள்ள குடியிருப்புகளில் வனத்துறை ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பேரிஜம் பகுதியில் விருந்தினர் மாளிகையும் உள்ளது. சமீப காலமாக பேரிஜம் பகுதியில் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம் அங்கு அதிகரித்துள்ளது. இதனால் வனத்துறை ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனவிலங்குகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதைக்கருத்தில் கொண்டு அங்கு வனத்துறை சார்பில், சோலார் மின் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு சோலார் மின்வேலி நேற்று அமைக்கப்பட்டது.

இந்த பணியை மாவட்ட வன அலுவலர் ரூபேஷ் குமார் மீனா, வனச்சரகர் சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இதற்கிடையே இன்று (புதன்கிழமை) முதல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்