ஆரணி நகராட்சியில் கிடப்பில் போடப்பட்ட சூரியசக்தி சாதனங்கள்

ஆரணி நகராட்சி சார்பில் மின்சாரத்துக்காக அமைக்கப்பட்ட சூரியசக்தி சாதனங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-12-15 16:20 GMT

ஆரணி நகராட்சி சார்பில் மின்சாரத்துக்காக அமைக்கப்பட்ட சூரியசக்தி சாதனங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மின்சிக்கன நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நகாட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. அத்துடன் மின்சிக்கன நடவடிக்கையாக 2010-2011-ம் நிதி ஆண்டில் ரூ.5 லட்சம் மதிப்பில் நகராட்சி அலுவலகத்துக்கு மட்டும் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை சூரியசக்தி மூலம் பயன்படுத்தி கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதற்காக செலவு செய்து சூரியசக்தியின் மூலம் அலுவலகத்துக்கு மின்சாரமும் கிடைக்கப்பெற்றது. ஆனால் நாளடைவில் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் சூரியசக்தி சாதனங்களை கிடப்பில் போட்டு விட்டு, ஜெனரேட்டரை பயன்படுத்துகின்றனர். அத்துடன் மின்சாரத்தையும் முழுமையாக பயன்படுத்துகின்றனர். இதனால் நகராட்சி மின்வாரியத்துறைக்கு அதிகளவில் பணம் செலுத்துகிற நிலை இருந்து வருகிறது.

அதிக மின்கட்டணம்

நகராட்சியில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் நகராட்சி ஆணையாளராக உள்ள டி.தமிழ்ச்செல்வி பொறுப்பேற்றவுடன் ஆரணி நகரில் ஆங்காங்கே தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை போர்வெல்கள் மினி பவர் டேங்குகளில் பயன்படுத்தப்படாத டேங்க்குகள் எவை என கண்டறியப்பட்டு அவற்றை மின்வாரியத்தில் தகவல் தெரிவித்து மின் இணைப்புகளை துண்டிப்பு செய்தார்.

இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்ட நகராட்சி ஆணையாளர், நகராட்சியில் வேலை பார்க்கும் அலுவலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கன் என பலருக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது. இந்தநிலையில் மின்வாரியத்துக்கு மட்டும் அதிகமாக மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மின்சாரம் மற்றும் பண சிக்கனத்தை கடைப்பிடிக்க சூரியசக்தி மூலம் நகராட்சி அலுவலகத்துக்கு முழுமையான மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், அதை விட்டு விட்டு சூரியமின்சக்தி சாதனத்தை கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்