சோலைமலை முருகன் கோவிலில்புளியோதரை பிரசாதம் தயாரிக்க நவீன எந்திரம்

சோலைமலை முருகன் கோவிலில் புளியோதரை பிரசாதம் தயாரிக்க நவீன எந்திரம் நிறுவப்பட்டுள்ளது;

Update: 2023-09-10 21:18 GMT

அழகர்கோவில்

அழகர்மலை உச்சியில் முருகப் பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் உள்ளது. இக்கோவிலில் லட்டு, முறுக்கு, அதிரசம், வடை, உள்ளிட்ட புளியோதரை, சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்கள் தினமும் பக்தர்களின் தேவையையொட்டி தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் பக்தர்கள் விரும்பி வாங்கும் புளியோதரை பிரசாதம் செய்ய நவீன கலவை எந்திரம் மூலம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் அழகர் கோவில் மற்றும் சோலைமலை முருகன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஏற்கனவே பஞ்சாமிர்தம் தயாரிக்கும் எந்திரம் நிறுவப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது பக்தர்கள் அதிகம் வாங்கும் புளியோதரை பிரசாதம் தயாரிக்கவும் நவீன எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் ஒரே முறையில் 16 கிலோ வரை புளியோதரை பிரசாதம் சமைக்கலாம். பக்தர்களின் வருகைக்கு ஏற்பவும், திருவிழா காலங்களிலும் உடனுக்குடன் கூடுதலாக புளியோதரை பிரசாதம் தயார் செய்யும் வகையில் இந்த எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்