சோலைமலை முருகன் கோவிலில் ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம்
சோலைமலை முருகன் கோவிலில் ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்தனர்
அழகர்கோவில்,
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் ஆகிய கோவில்களில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 9 பேர் கொண்ட குழுவினர் பழநி புலிப்பானி சித்தர் ஆசிரமம் மூலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ேகாவில் சார்பில் மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி மரியாதை வழங்கப்பட்டது. மேலும் அந்த குழுவினர்கள் சாமி சிலைகளையும், ஓவியங்களையும் வியப்புடன் பார்த்து மகிழ்ந்தனர். முன்னதாக ஜப்பான் நாட்டு குழுவினரை கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர். ஏற்கனவே கடந்த வாரம் இதே போல் ஜப்பான் நாட்டிலிருந்து 40 பேர் கொண்ட குழுவினர் வந்து சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.