மண் மாதிரி சேகரிப்பு முகாம்

கலவை அருகே மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடந்தது.

Update: 2022-06-05 17:33 GMT

கலவை

கலவையை அடுத்த வெள்ளம்பி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி தலைமை தாங்கி, மண் பரிசோதனையின் அவசியம், மண் மாதிரி எடுக்கும் கால அளவு, அதன் கருவிகள் பற்றி விளக்கமாக கூறினார்.

மேலும் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி மண் எடுக்கும் கருவி, மண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப வேண்டிய காலம், மண் வள அட்டை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் செண்பகம் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்