ஊத்துக்குளி
குன்னத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சித்தாண்டி பாளையம் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை ஒரு மண்ணுளிப் பாம்பு தென்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் அங்கு வந்து மண்ணுளிப் பாம்பை லாபமாக பிடித்தார். அது சுமார் 2 கிலோ எடை இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் அந்த மண்ணுளிப்பாம்பு குன்னத்தூர் குளத்தில் பத்திரமாக விடப்பட்டது.