பிராணிகள் வதை தடுப்பு சங்க பொதுக்குழு கூட்டம்

Update: 2023-08-19 18:45 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிராணிகள் வதைத்தடுப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டின் வரவு, செலவு கணக்கை தணிக்கை செய்து பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவது, சங்கத்தை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மேலும் 22 செயற்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் நடராஜன், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் டாக்டர் செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன் மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்க செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்