செங்கோட்டை:
செங்கோட்டை அம்மா உணவகம் முன்பு சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் ஹிந்து சமுதாய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சகோதரத்துவ நல்லிணக்க விழா நடந்தது. ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமை தாங்கினார். உயர்நீதிமன்ற வழக்கறிஞா் மாரியப்பன் முன்னிலை வகித்தார். ராஷ்ட்டிரிய சுயம்சேவக சங்க கோட்ட தலைவா் காமராஜ், மாவட்ட தலைவா் குருமூர்த்தி, தமிழ்நாடு பாரதிய மஸ்தூர் சங்க மாநில அமைப்பு செயலாளா் தங்கராஜ், தென்காசி மாவட்ட சமுதாய நல்லிணக்க பேரவை அமைப்பாளா் வரதராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். விழாவில் அனைவரும் சகோதரத்துவ மற்றும் சமுதாய ஒற்றுமை, நல்லிணக்கதை வெளிப்படுத்தும் விதமாக ராக்கி கயிறுகளை ஒருவருக்கொருவா் கட்டி கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். பின்னா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன. ராஷ்ட்டிரிய சுயம்சேவக சங்க நகர செயலாளா் அயோத்யா முருகேசன் நன்றி கூறினார்.